கோவில் நகரமான மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 அறிவிப்பு வெளியாகி உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் செய்தி வெளியிட்டுள்ளார்.
மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஓதுவார் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில்களில் திருமுறைகளை குறைவின்றி பாடுவதற்காகவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நோக்கத்திலும் இந்த பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகிறது. இதில் தற்போது 2024-25 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. விருப்பமுள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பயிற்சியின் சிறப்பம்சம்:
ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மூன்றாண்டு படிப்புடன், சான்றிதழ் வழங்கப்படுகிறது. அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ஓராண்டு படிப்புடன் சான்றிதழும் வழங்கபடுகிறது. மேலும் இந்த இரு பயிற்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உடை,தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளுடன் ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
தகுதி:
இந்த இரு பயிற்சிகளிலும் சேர விரும்பும் மாணவர்கள் இந்து சமய கோட்பாடை கடைபிடிப்பவராகவும், 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.ஓதுவார் பயிற்சி பெற விரும்புவோர்க்கான வயது தகுதி 13 முதல் 20 ஆகும். அர்ச்சர்கர் பயிற்சி பெற விரும்புவோர் வயது தகுதி 14 முதல் 24 ஆகும்.
கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு முடிவு ! உயர்கல்வி துறை வெயிட்ட முக்கிய அறிவிப்பு !
விண்ணப்பிக்க:
இதில் சேருவதற்கான விண்ணப்பங்களை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி
இணை ஆணையர்
செயல் அலுவலர்,
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,
மதுரை – 625001
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 19 மாலை 5.45 மணிக்குள். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.