மதுரையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் டிகிரி முடித்த மாணவர்கள் படித்த படிப்புக்கான வேலைகள் கிடைக்காமல் அல்லோல் பட்டு வருகின்றனர். இன்னும் சொல்ல போனால் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தால் தண்ட சோறு என்று கூறி கேவலம் படுத்துவோர் மத்தியில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று ஒரு தன்னம்பிக்கையுடன் படித்த படிப்பிற்கு சம்மந்தம் இல்லாத துறைகளில் வேலை பார்க்கும் சூழ்நிலைக்கு காலம் தள்ளிவிடுகிறது.
இருப்பினும் வேலை கிடைக்காமல் எத்தனையோ பட்டதாரிகள் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்குகின்றனர். அப்படி வேலை இல்லாமல் திண்டாடும் மாணவர்களுக்காக மதுரை மாவட்ட கலெக்டர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பொதுவாக வேலையில்லாமல் திண்டாடும் மாணவர்களுக்காக ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த படுவது வழக்கம்.
மதுரையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
அந்த வகையில் இந்த மாதம் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நிறை வழி காட்டு மையத்தின் சார்பாக நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாம் ஸ்ரீ மீனாட்சி அரசினர் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. இதில் 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர் வரை கலந்து கொள்ளலாம்.
மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணிக்குள் வர வேண்டும். madurai job news
அதுமட்டுமின்றி தங்களுடைய கல்வி சான்றிதழ்(அசல் / நகல்), ஆதார் கார்டு மற்றும் passport size போட்டோவுடன் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Also Read: கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் – எச்சரிக்கை கொடுத்த தமிழக அரசு!!
மேலும் இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் உட்பட கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கிறது.
எனவே வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டு பலனடைந்து கொள்ளுங்கள்.madurai private sector employment camp
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்