Home » செய்திகள் » மதுரை புதூர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.., நோயாளிகள் நிலை என்ன?

மதுரை புதூர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.., நோயாளிகள் நிலை என்ன?

மதுரை புதூர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.., நோயாளிகள் நிலை என்ன?

தூங்கா நரகம் என்று பெயர் எடுத்த மதுரை புதூர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Old Bharathi Hospital:

தமிழகத்தில் உள்ள பரபரப்பான மாவட்டமான மதுரையில் உள்ள புதூர் அருகே தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அந்த மருத்துவமனையில் உள்ள 3வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ வேகமாக பரவ தொடங்கிய நிலையில்,  அக்கம் பக்கத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்தும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தீ விபத்து ஏற்பட்ட அந்த மாடியில் மருத்துவமனை இயங்கவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அங்கிருந்த, நோயாளிகள் வேறு மாடிக்கு மாற்றப்பட்ட காரணத்தால் தான் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. விரைவில் தீ விபத்துக்கான காரணம் பற்றிய தகவல் மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!

PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் – இஸ்ரோ அறிவிப்பு!

அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!

2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!

2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top