Home » செய்திகள் » மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை – நடுநடுங்கிப் போன பொதுமக்கள்!

மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை – நடுநடுங்கிப் போன பொதுமக்கள்!

மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை - நடுநடுங்கிப் போன பொதுமக்கள்!

மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை: சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட சம்பவங்கள் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை.

மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை – நடுநடுங்கிப் போன பொதுமக்கள்!

இந்நிலையில் மதுரை மாவட்டம் ஒரு பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரை திருப்பாலை காவல் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் தலை, துண்டிக்கப்பட்ட நிலையில், சாலையில் கிடந்துள்ளது.

இதை பொதுமக்கள் காலை 7 மணிக்கு பார்த்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் துண்டிக்கப்பட்ட தலையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழை – உஷாரா இருந்துக்கோங்க மக்களே!

மேலும் தலைக்கான உடல் என்ன ஆனது எங்கே உள்ளது என்பது குறித்து  போலீஸ் மோப்பநாய் உதவியுடன் தேடி வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி கூர்மையான ஆயுதங்களால் தலையை வெட்டி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலையை செய்த நபர் குறித்து காவல்துறை எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை

மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top