Home » செய்திகள் » மதுரை சிறுவன் கடத்தல்‌ விவகாரம் – ஒருவரை அதிரடியாக கைது செய்த போலீஸ் –  என்ன நடந்தது?

மதுரை சிறுவன் கடத்தல்‌ விவகாரம் – ஒருவரை அதிரடியாக கைது செய்த போலீஸ் –  என்ன நடந்தது?

மதுரை சிறுவன் கடத்தல்‌ விவகாரம் - ஒருவரை அதிரடியாக கைது செய்த போலீஸ் -  என்ன நடந்தது?

Breaking News: மதுரை சிறுவன் கடத்தல்‌ விவகாரம்: மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். அவருக்கு மைதிலி ராஜலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார். ராஜ்குமார் கடந்த ஆண்டு கடன் பிரச்சனை காரணமாக மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி இருக்கையில் கணவன் இல்லாமல் தனது மகனை மைதிலி ராஜலட்சுமி அப்பாவின் உதவியுடன் வளர்த்து வந்துள்ளார். மேலும் தனது மகனை பள்ளிக்கு ஆட்டோ ஓட்டுநர் பால் பாண்டியின் ஆட்டோவில் தான் அழைத்து செல்வார். அதே போல் நேற்றும் அழைத்து சென்ற போது சில மர்ம நபர்கள் ஆட்டோவுடன் கடத்தி சென்றனர்.

மேலும் அவர் 2 கோடி ரூபாய் கேட்டு மைதிலியை மிரட்டியுள்ளார். இதையடுத்து மைதிலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில், சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர்.

Also Read: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

ஆனால் அங்கிருந்து குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை துரத்தி போலீஸ் சென்றது. இந்நிலையில் அந்த மர்ம கும்பலை சேர்ந்த ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.  அந்த நபரை தற்போது காவலில் வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top