மதுரை தமுக்கம் புத்தகக் கண்காட்சி விழா - சாமியாடிய பள்ளி மாணவிகள் !மதுரை தமுக்கம் புத்தகக் கண்காட்சி விழா - சாமியாடிய பள்ளி மாணவிகள் !

அரசு சார்பில் மதுரை தமுக்கம் புத்தகக் கண்காட்சி விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விழாவில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்திருந்தார்.

அத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தலின் படி காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதனை தொடர்ந்து புத்தகக் கண்காட்சி தொடக்க விழா என்பதால் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மேடைகளில் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் போது ‘அங்கே இடி முழங்குது’ என்ற கருப்பசாமி பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கருப்பசாமி வேடமிட்ட ஆடி வந்தார்.

இதனையடுத்து இந்த பாடல் ஒலிக்க ஒலிக்க அங்கிருந்த மாணவிகள் சிலர் சாமியாடத் தொடங்கினர்.

அத்துடன் சுற்றி இருந்த மற்ற மாணவிகளும் ஆசிரியர்களும் சாமியாடிய மாணவிகளை கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியாமல் தவித்தனர்.

தற்போது மாணவிகள் சாமியாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள், ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவிகள் முகத்தில் தண்ணீர் தெளித்து இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு – விளக்கம் அளிக்க சென்னை வரும் மகா விஷ்ணு!

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அரசு இசைக்கல்லூரியை சேர்ந்த குழுவால் தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேலும் நாட்டுப்புற பாடல் வரிசையில் தான் இந்த பாடல் பாடப்பட்டது. அத்துடன் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் உற்சாகத்தில் நடனம் ஆடினர் சிலர் சாமி வந்து ஆடினர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *