Home » செய்திகள் » கார் பைக் மோதி கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.., கோவிலுக்கு போனவர்களுக்கு  நேர்ந்த சோகம்!!

கார் பைக் மோதி கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.., கோவிலுக்கு போனவர்களுக்கு  நேர்ந்த சோகம்!!

கார் பைக் மோதி கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.., கோவிலுக்கு போனவர்களுக்கு  நேர்ந்த சோகம்!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கார் பைக் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் சமீப காலமாக சாலை விபத்துகளில் உயிர் போகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கார் பைக் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரை திருமங்கலம் சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்த கனகவேல் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் தளவாய் புறத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவரின் கார் அதிவேகத்தில் வந்த நிலையில், அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கொய்யாப்பழ வியாபாரியான பாண்டி அந்த நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அந்த சமயம் காரின் பிரேக் பிடித்தும் கூட வேகம் குறையாமல் கொய்யாப்பழ வியாபாரி வந்த பைக் மீது மோதி கோர விபத்தாக மாறியது. இதில் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரின் உடலையும் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.      

விசிக தலைவர் திருமாவளவன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top