Home » சினிமா » ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை – சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!

ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை – சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!

ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை - சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!

திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மதுரை திருமங்கலத்தில் ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை செய்து அசத்தியுள்ளார்.

SUPER STAR RAJINI:

முன்பெல்லாம் ஒரு ஹீரோயினுக்கு தான் கோவில் கட்டி அழகு பார்த்தார்கள். ஆனால் இப்பொழுது நடிகர்களுக்கும் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அதாவது, தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் மதுரையில் உள்ள திருமங்கலத்தில்  ‘அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்’ ஒன்றை உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், மேட்ரிமோனி இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த நவராத்திரி விழாவின் பொழுது ரஜினி இதுவரை நடித்த திரைப்பட கதாபாத்திரங்களை கொண்டு கொலு அமைத்து பார்வைக்கு வைத்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாள் நாளை (டிச.12) கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இதனை முன்னிட்டு அந்த கோவிலில் இதுவரை இருந்த ரஜினி சிலைக்கு மாற்றாக “மாப்பிள்ளை” படத்தின் கதாபாத்திரத்தை மாடலாக கொண்ட புதிய உருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலை 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலை. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!

பிக் பாஸ் 8ல் மிட் வீக் எவிக்‌ஷன் – அதிர்ச்சியுடன் வீட்டுக்கு பொட்டியை கட்டும் போட்டியாளர் யார்?

ஹாலிவுட்டில் தனுஷுடன் நடிக்கும் சிட்னி ஸ்வீனி – அச்சச்சோ அவர் டிரெஸ்ஸே போடமாட்டாரே?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top