மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள் குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திருப்பரங்குன்றம் கோயில். முருகன் இருக்கும் இந்த மலை மீது இஸ்லாமிய தர்கா ஒன்று அமைந்துள்ளது. அதே போல், அதன் மறுபுறத்தில் பழங்கால சமணர் குகை ஒன்றும் அமைந்துள்ளது. அங்கு தினசரி மக்கள் வந்து செல்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் பகுதியில் மத ரீதியான முரண்பாடுகள் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றத்தில் சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள்.., வெடித்த மத பிரச்சினை!
அண்மையில் கூட திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிலர் ஆடுகளை பலியிடுவதற்காக கொண்டு வந்தனர். ஆனால் அங்கு அவர்களை ஆடு வெட்ட அனுமதி இல்லை என்று அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தர்காவுக்கு எதிராக அமைந்துள்ள சமணர் குகையை மர்ம நபர்கள் ஆக்கிரமிக்கும் விதமாக அக்குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்துள்ளனர்.
யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு.., பிப்ரவரி 11ம் தேதி வரை தான் டைம்?.., விண்ணப்பிப்பது எப்படி?
இதனை தொடர்ந்து இப்படி பழங்கால தொல்லியல் சின்னமாக விளங்கி வந்த சமணர் குகையில் சில மர்ம நபர்கள் பெயிண்ட் அடித்ததை தொடர்ந்து தொல்லியல் அலுவலர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?
இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!