Home » செய்திகள் » பயணிகளே…, விரைவில் இந்த மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம்.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

பயணிகளே…, விரைவில் இந்த மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம்.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

பயணிகளே..., விரைவில் இந்த மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம்.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

விரைவில் வந்தே பாரத் ரயில்

பொதுவாக பயணத்திற்காக மக்கள் முதலில் தேர்தெடுப்பது ரயில் பயணத்தை தான். குறைந்த கட்டணத்தில் விரைவாக செல்வதற்கு ரயில் பயணத்தை கிளிக் செய்கிறார்கள். மேலும் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து மதுரை – பெங்களூரு இடையே உள்ள   7 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே வந்தே பாரத் ரயில் சென்னை – பெங்களூரு, சென்னை – விஜயவாடா, சென்னை – திருநெல்வேலி, கோவை – சென்னை, கோவை – பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி வந்தே பாரத் ரயில் பயணிகளிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் கூடுதலாக சில பகுதிகளில் தொடங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆலோசனை செய்து வந்தது. அதன்படி மதுரையில் தொடங்கலாம் என பலர் கோரிக்கை வைத்த நிலையில், முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மதுரை – பெங்களூரு இடையே உள்ள  7 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். மேலும் இதை அடுத்த வாரம் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆரஞ்சு நிறத்தில் தயாராகி வரும் இந்த ரயில் மதுரையில் தொடங்கி, திண்டுக்கல், கரூர், சேலம் , ஓசூர் வழியாக சென்று பெங்களூருவை அடையும் என்று கூறப்படுகிறது. 

பெண்களே குட் நியூஸ்.., 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top