மாவட்ட கலெக்டர் அவர்கள் ஒப்புதலின் அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பாக தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024 OSC அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள வழக்கு பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட தமிழக அரசு பணி தொடர்பான அனைத்து குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் முழு தகவல்களையும் அறிந்து கொண்டு பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவன பெயர் | OSC One Stop Centre |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்களின் எண்ணிக்கை | 2 |
வேலை இடம் | உசிலம்பட்டி |
தொடக்க தேதி | 15.07.2024 |
கடைசி தேதி | 31.07.2024 |
தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024
துறையின் பெயர் :
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
வழக்கு பணியாளர் – 02
சம்பளம் :
Rs.18,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவுதலில் 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மதுரை – தமிழ்நாடு
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் Rs.40,000 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட வழக்கு பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மூன்றாவது தளம்,
கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை – 625020
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.