தற்போது மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த மகளிர் விடுதியின் உரிமையாளர் மற்றும் வார்டன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மதுரை :
மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகில் கட்ராபாளையம் பகுதியில் விசாகா பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த தங்கும் விடுதியில் பல இடங்களில் வேலை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வந்தனர் என்று கூறப்படுகிறது.
தீ விபத்து :
இந்த நிலையில் இன்று (12-09-2024) அதிகாலை 4 மணியளவில் இந்த விடுதியில் இருந்த பிரிட்ஜ் ஒன்று திடீரென்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடுமையான கரும்புகை ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விடுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தி அந்த விடுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பத்திரமாக மீட்டனர்.
இருவர் உயிரிழப்பு :
அந்த வகையில் இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், விடுதியில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை !
இதனை தொடர்ந்து விடுதியின் உரிமையாளர் மற்றும் வார்டன் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் நேரில் சென்று தங்கும் விடுதி முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார்.