9 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல் முறையீடு. மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று சட்டபேரவையில் முதல்வர் உறுதியளித்துள்ளார்.
9 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல் முறையீடு ! தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும் – முதல்வர் உறுதி !
நிதி பற்றாக்குறை தான் காரணம் :
தமிழகத்தில் இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் மகளிர் உரிமைத்தொகை கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலவர் திமுக ஆட்சிக்கு வந்தே போதே மகளிர் உரிமைத்தொகை வழங்கி இருப்போம். ஆனால் அப்போது நாட்டின் நிதி நிலைமை சரியாக இல்லை. தற்போது நிதி நிலைமை ஓரளவு சரியானதை தொடர்ந்து தகுதியான மகளிர்களை தேர்ந்தேடுத்து மகளிர் உரிமைத்தொகை தற்போது வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
எந்த கட்சியாக இருந்தாலும் பயனடையலாம் :
மகளிர் உரிமைத்தொகை மூலம் திமுக அல்லாத அனைத்து கட்சி மகளிருக்கும் வழங்கப்படும். ஆனால் இத்திட்டம் மூலம் பயனடைய மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்களாக இருக்க வேண்டும்.
மேல் முறையீட்டு விண்ணப்பம் :
தற்போது மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ரூ. 1,000 என்று 1.6 கோடி பேர்களுக்கும் அதிகமான மகளிருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. உரிமைத்தொகை மூலம் பயனடையாத மகளிர்களில் சுமார் 9 லட்சம் பேர்கள் விண்ணப்பித்து இருக்கின்றார்கள். இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மகளிர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை மின்தடை (10.10.23) இருக்கு ! இந்த மாவட்ட மக்கள் உஷார் உஷார் !
இன்றைய சட்டப்பேரவையில் பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டாலும் மகளிர் உரிமைத்தொகை அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது. உரிமைத்தொகை பெற விண்ணப்பித்து பயனடையாத மகளிர்கள் மீண்டும் விண்ணப்பித்தவர்களில் , தகுதியான மகளிராக இருந்தால் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.