தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை: தமிழகத்தில் வலம் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு சூப்பர் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது அரசு. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை
மேலும், குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க, சுமார் ரூ 11,650 கோடி தேவைப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் சேர தொடர்ந்து பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத்தலைவி களுக்கு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மகளிர் உரிமை தொகை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் முன்னாள் மாநகராட்சி ஊழியர்கள் மனைவிகள், முன்னாள் அரசு ஊழியர்கள் மனைவிகள் , புதிதாக கல்யாணமான பெண்கள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் ஆகியோரை சேர்ப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
இதனால் உரிமைத் தொகை பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அதன்படி 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த அறிவிப்பு அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டும், திமுகவின் பவள விழாவை முன்னிட்டும் வெளியாகலாம் என கூறப்படுகிறது. magalir urimai thogai scheme 2024
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்