மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு. தமிழகத்தில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் மகிளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு !
மகளிர் உரிமைத்தொகை திட்டம் :
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அனைவராலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் எதிர்பார்க்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தகுதியான மகளிர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த செப்டம்பர் 15ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஒரு கோடி பெண்களுக்கு ரூ. ஆயிரம் மூலம் பயனடைந்துள்ளனர். திட்டத்தின் மூலம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் மீண்டும் விண்ணப்பிக்கும் நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் :
மதுரை மாவட்டத்தினை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவரை சார்ந்த வக்கீல் ஜெயசுகின் , நரேந்திர குமார் வர்மா இருவரும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்துள்ளார்கள்.
பொதுநல மனுவில் கூறியது :
1. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பல மாவட்டங்களில் இருக்கும் ஏழை மகளிர்கள் பயனடையவில்லை. இதிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளது.
2. தற்போது தமிழக அரசு ரூ. 7.54 லட்சம் கடனில் இருக்கின்றது.
3. இந்நேரத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி செலவு செய்வதால் தமிழகம் மேலும் கடனில் இருக்கும்.
4. எனவே கடந்த ஜூலை 10ம் தேதி அரசு வெளியிட்ட மகளிர் உரிமைத்தொகை திட்ட அரசனை இயற்க்கைக்கு புறம்பான சட்ட விரோதம்.
” ஹமாஸ் படையினர் முழுமையாக அழிக்கப்படுவர் ” இஸ்ரேல் உறுதி ! முழு விபரம் உள்ளே
பல ஏழை குடும்பங்கள் மாதம் ரூ. 1000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பொதுநல மனுவினால் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர்.