
இந்த ஆண்டு மகா சிவராத்திரி 2025 யை முன்னிட்டு இன்று இரவில் கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். maha shivratri 2025 night time pooja
maha shivaratri 2025.., இன்று இரவில் கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?.., முழு விவரம்!!
ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியை தான் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். அதன்படி, இன்று (பிப்ரவரி 26) காலை 10.19 மணி முதல், நாளை (பிப்ரவரி 27) காலை 09.01 வரை சதுர்த்தி திதி உள்ளது.
மேலும் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை சிவ பெருமானுக்கு தொடர்ந்து 4 கால பூஜைகள் நடைபெறும். 4 கால பூஜையிலும் பங்கேற்க முடியாதவர்கள். இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும் 3ம் காலம் மற்றும் 4ம் கால பூஜைகளில் மட்டுமாவது கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த 2 காலங்களும் மிக முக்கியமான காலங்கள். மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து தன்னை பூஜித்தவர்களுக்கு வேண்டிய வரங்களை சிவ பெருமான் அருளும் காலமும் இந்த 4ம் கால பூஜை தான் என்று வரலாறு சொல்கிறது. ஒருவேளை கண் முழிக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
நவகிரகங்கள் – சூரியன் முதல் கேது வரை விளக்கம்
அதாவது இன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், இன்று அதிகாலையில் எழுந்து சுத்தமாக குளித்து விட்டு, சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு உங்களது வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி சிவனை வணங்க வேண்டும்.
இதையடுத்து, சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். பின்னர் கடவுள் முன்னாடி உட்கார்ந்து சிவ சிவ அல்லது ஓம் நம சிவாய என ஏதாவது ஒரு மந்திரத்தைகண்களை மூடி, வாய் விட்டு சொல்ல வேண்டும். குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது சிவனை மனதில் நினைத்து சொல்ல வேண்டும்.
குறிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திரத்தை சொல்ல கூடாது. மந்திர ஜபத்தை பாதியில் நிறுத்த கூடாது. இப்படி செய்தால் சிவராத்திரி அன்று இரவு கண் விழித்த பலனும், சிவனின் அருளும், நீங்கள் வேண்டிய வரங்களும் கிடைக்கும் என்று ஐதீகம் உள்ளது. ஆண்களுக்கு சிவராத்திரி என்று ஒன்று தான் உள்ளது. அதே போல பெண்களுக்கு நவராத்திரி என்று ஏழு நாட்கள் உள்ளது வரலாறு சொல்கிறது. maha shivratri 2025 night time pooja
ஆன்மீகம்:
2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – தேதி குறித்த அறநிலைத்துறை!
திருமணம் தடைபட்டு போகுதா? .., அப்ப இந்த கோவிலுக்கு போங்க.., கல்யாணம் கன்ஃபார்ம்!!
எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் நல்லது?.., அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் வரலாற்று விவரங்கள்! அடடா இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!
சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு தெரியுமா?.., அடடா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!