ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு: சென்னையில் இருக்கும் அசோக் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட மகா விஷ்ணு என்பவர் மாணவர்களுக்கு பாவ – புண்ணியம், மறுபிறவி, குறித்து முன்ஜென்மம் தவறு செய்ததால் தான் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு
இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியவாதிகள் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை புகார்களை கொடுத்து வருகின்றனர். மேலும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்தது பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம். மேலும் மகா விஷ்ணு மீது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் அவர் ஓடி ஒளிந்துள்ளதாக இணையத்தில் விமர்சனங்கள் பரவிய நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து விளக்கம் அளிக்கப்போவதாக மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ” என்னுடைய கடமைகள் இருந்ததால் தான் அசோக் நகர் பள்ளி, சைதாப்பேட்டை பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நிகழ்ச்சியை முடித்த அடுத்த நாளே நான் ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். maha vishnu
Also Read: கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம் – மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!
இதில் ஓடி ஒளிவதற்கான விஷயமே கிடையாது. எதற்காக நான் ஓடி ஒளிய வேண்டும். அப்படி ஓடி ஒளியும் அளவுக்கு நான் என்ன தவறான கருத்தைச் சொல்லிவிட்டேன் சொல்லுங்க.
இன்று (சனிக்கிழமை) மதியம் 1.10 மணியளவில் நான் சென்னை Airport வருகிறேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு விளக்கத்தை நான் அளிக்கிறேன் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை