Home » செய்திகள் » ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை – மகளுக்கு மகாலட்சுமி பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி!!

ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை – மகளுக்கு மகாலட்சுமி பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி!!

ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை - மகளுக்கு மகாலட்சுமி பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி!!

Mahalakshmi Express train ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை: இந்தியாவின் கோலாப்பூர்- மும்பை வழியாக செல்லும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 6ம் தேதி பாத்திமா(31) என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் தன்னுடைய கணவருடன்  மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து பாத்திமா சரியாக இரவு 11 மணி அளவில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.  

ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை

உடனே அங்கிருந்த பெண் பயணிகள் பாத்திமாவுக்கு முதலுதவி செய்துள்ளனர். அங்கேயே அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது இதையடுத்து அங்கு வந்த  ரயில்வே போலீசார் தாயும் குழந்தையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது தாயும் சேயும் நன்றாக இருக்கும் நிலையில்,  அந்த ரயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘மகாலஷ்சுமி’ என்று பெயரையே பெற்றோர் சூட்டியுள்ளனர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும் அந்த ரயிலை நினைவூட்டும் விதமாக குழந்தைக்கு அந்த ரயிலின் பெயரை வைத்துள்ளனர். 

ஏமன் கடலில் படகு மூழ்கி பயங்கர விபத்து –  49 பேர் உயிரிழப்பு … 140 பேர் மாயம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top