Home » சினிமா » “மகாராஜா” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? –  படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

“மகாராஜா” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? –  படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

"மகாராஜா" படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? -  படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

Vijay Sethupathy in “மகாராஜா” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது: தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகர்களில் ஒருவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் மகாராஜா. அவரின் 50வது படமான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடித்து இருந்தது. குறிப்பாக அப்பா கேரக்டர் ரோலில் நடித்த போதிலும், தனது அசாதாரண நடிப்பை அவர் கொடுத்து இருந்தார்.

மேலும் இப்படத்தில் அவருடன் சேர்ந்து அனுராக் காஷ்யப், சச்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ், நடராஜன், அபிராமி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Also read: ரஜினியின் ’கூலி’ படத்தில் இணைந்த விஜய்யின் ‘பிகில்’ நடிகை – அட இவங்கள – இதை யாருமே எதிர்பார்க்கலயே!

இந்நிலையில் இப்படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் NETFLIX ஓடிடி தளத்தில் வருகிற 12ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் ஓடிடி தலத்திலும் நல்ல வரவேற்பை பெறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top