மகாராஷ்டிரா மாநிலத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றுக்குள் விழுந்த பூனை – காப்பாற்ற உயிரை விட்ட 5 பேர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமத்நகர் மாவட்டத்தில் ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக ஒரு பூனை விழுந்துள்ளது. அதை பார்த்த 5 பேர் கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் ஒருவர் பின் ஒருவராக உள்ளே குதித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் குதித்த 5 பேரும் பேச்சும் மூச்சும் இல்லாமல் இருந்து வந்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அவர்களை காப்பாற்ற கிணற்றில் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6வது நபரும் உள்ளே மாட்டிக் கொண்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக அவரை காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அந்த பாழடைந்த கிணறு விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் கிணறு என்று போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.