மகாராஷ்டிராவில் 195 இடங்களை பிடிக்கும் BJP. தற்போது மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் 195 இடங்களை பிடிக்கும் BJP
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் :
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்துடன் இதில் பதிவாகிய வாக்குகள் வரும் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கவுள்ளது.
அந்த வகையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.
இதனையடுத்து தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அந்த வகையில் Peoples Pulse கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி 175 முதல் 195 இடங்களையும்,
காங்கிரஸ் கூட்டணி 85 முதல் 112 இடங்களையும், மற்றவை 7 முதல் 12 இடங்களையும் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் CNN News18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் பாஜக கூட்டணி 154 இடங்களையும்,
காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களையும் மற்றவை 6 இடங்களையும் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இனி 50-50 work from home ஆப்ஷன் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதனையடுத்து ஏபிபி மெட்ரிஸ் கருத்துகணிப்புப்படி பாஜக கூட்டணி 150 முதல் 170 இடங்களை வெல்லும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 110 முதல் 130 இடங்களை வெல்லும் எனவும், மற்றக் கட்சிகள் 8 முதல் 10 தொகுதிகள் வெல்லும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
அதனைபோல் பி-மார்க் கருத்துக்கணிப்பின்படி பாஜக கூட்டணி 137 முதல் 157 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 126 முதல் 146 இடங்களிலும், மற்றவை 2 முதல் 8 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.