பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய்: மாநில மற்றும் மத்திய அரசு தொடர்ந்து பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பல்வேறு நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா அரசு பெண்களுக்கான கொண்டு வந்த திட்டம் தான் ‘லட்கி பஹின் யோஜனா’.
பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய்
இத்திட்டம் மூலம் பெண்கள் பயணடைந்து வரும் நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது. அதாவது ‘லட்கி பஹின் யோஜனா’ கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த பட்ஜெட்டில் தான் கொண்டு வரப்பட்டது. எனேவ இத்திட்டம் மூலமாக பெண்களுக்கு ரூ.1500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த திட்டத்தில் இணைவதற்கு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் தொடர்ந்து மக்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் தற்போது இத்திட்டங்கள் இணைவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாத இறுதி வரை ‘லட்கி பஹின் யோஜனா’ திட்டத்தில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
Also Read: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஆல் பாஸ் எடுத்தால் தலா ரூ.10 ஆயிரம் – பேரவைத் தலைவர் அறிவிப்பு!
மேலும் இந்த திட்டத்திற்காக ரூ.46,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் பெண்களுக்கு 21 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பாக விண்ணப்பிக்கும் பெண்கள் குடும்ப வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை