மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் - தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு !மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் - தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு !

அரசு பள்ளியில் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பான விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை மாதிரி பள்ளியில் பொது தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், திருப்பூரைச் சேர்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர், அறிவியலுக்கு சம்பந்தமில்லாத மூடநம்பிக்கைகளை விதைக்கும் விதமாக கடந்த ஜென்மம், பாவ புண்ணியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். Mahavishnu Spiritual Controversy Speech Issue

அந்த வகையில் இவர் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, இவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து தற்பொழுது மகாவிஷ்ணு விசாரணை போலீஸ் காவலில் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் விசாரணை முடிவடைந்து தற்போது அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ‘கூல் லிப்’ ஐ ஏன் தடை செய்யக்கூடாது ? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி !

இதனையடுத்து பள்ளி கல்வித்துறை இயக்குனரின் விரிவான விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி ஐ.ஏ.எஸ் மூலமாக தலைமைச் செயலாளரிடம் முறையாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து இந்த அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அடுத்த கட்டமாக தவறு செய்தவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதை பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *