5 கதவுகள் கொண்ட Mahindra Thar போட்டோக்கள் கசிவு - எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்!!5 கதவுகள் கொண்ட Mahindra Thar போட்டோக்கள் கசிவு - எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்!!

5 கதவுகள் கொண்ட Mahindra Thar போட்டோக்கள் கசிவு: இந்தியாவின் மிகவும் பழமையான அதே சமயம் நவீன தொழில்நுட்பங்களுடன் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் தான் மஹிந்திரா. இந்த நிறுவனத்திற்கு என்று மக்கள் மத்தியில் தனித்துவ வரவேற்பு இருந்து வருகிறது.

தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளுடன் கூடிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 5 கதவுகள் கொண்ட எஸ்யூவி வாகனமான தார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என மஹிந்திரா நிறுவனம்  அறிவித்திருந்தது.

ஆனால் அந்த கார் எப்படி இருக்கும் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இப்பொழுது வரை மகேந்திர நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் எஸ்யூவி வாகனமான தார் வாகனம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Also Read: உலகத்திலேயே பிரதமர் மோடி தான் பர்ஸ்ட் – அப்படி என்ன சாதனை செய்தார் தெரியுமா?

அதாவது மஹிந்திரா நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள  5 கதவுகள் கொண்ட எஸ்யூவி வாகனமான தார் வாகனம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. மேலும் இந்த காரின் ஆரம்ப விலை 15 லட்சத்தில் தொடங்கி 30 லட்சம் வரை விற்பனையாகலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த தார் வாகனம் அடுத்த மாதம் முதல் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *