Home » சினிமா » போட்றா வெடிய.., மீண்டும் வரபோகும் சூப்பர் ஹிட் ஷோ.., மகாபா சொன்ன சீக்ரெட் இதான்?.., வெளியான கலக்கல் ப்ரோமோ!!

போட்றா வெடிய.., மீண்டும் வரபோகும் சூப்பர் ஹிட் ஷோ.., மகாபா சொன்ன சீக்ரெட் இதான்?.., வெளியான கலக்கல் ப்ரோமோ!!

போட்றா வெடிய.., மீண்டும் வரபோகும் சூப்பர் ஹிட் ஷோ.., மகாபா சொன்ன சீக்ரெட் இதான்?.., வெளியான கலக்கல் ப்ரோமோ!!

சூப்பர் ஹிட் ஷோ

விஜய் டிவியில் மக்களை கவர வேண்டும் என்று பல ரியாலிட்டி ஷோக்களை ஆரம்பித்து ஒளிபரப்பி வருகிறது. பிக்பாஸ் சீசன் 7 முடிந்த பிறகு பலரும் எதிர்பார்த்த ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். ஆனால் இந்த ஷோவில் ஆரம்பிப்பதில் சிக்கல் இருக்கிறது என்று பலரும் பேசி வருகின்றனர். குறிப்பாக இந்த ஷோவில் இருந்து வெங்கடேஷ் பட் விலகிய நிலையில், ஷோ ஆரம்பிக்க வாய்ப்பில்லை என்று கூறி வருகின்றனர். இதற்கிடையில் மகாபா ஆனந்த் ஒரு பேவரைட் ஷோ திரும்ப வர போகிறது என்று அவ்வவ்போது கூறி ஹைப்பை ஏற்றி வைத்துள்ளார்.

ஆனால் அது என்ன ஷோ என்று சொல்லாமல் எதிர்பார்ப்பை தூண்டி வந்தார். குக் வித் கோமாளி தான் வர போகிறது அதை தான் சிம்பாலிக்கா சொல்கிறார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், தற்போது அந்த ஷோ குறித்து ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோவான “அது இது எது” ஷோ தான் மீண்டும் வர இருக்கிறது. அதற்கான ப்ரோமோவை தான் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த ஷோவை வழக்கம் போல மகாபா ஆனந்த் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் கல்லூரி மாணவர்கள்.. எமனாக வந்த லாரி.., 3 பேர் பலி!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top