சிறுத்தை சிவா தம்பி பாலா கைது - எதற்காக தெரியுமா?சிறுத்தை சிவா தம்பி பாலா கைது - எதற்காக தெரியுமா?

சிறுத்தை சிவா தம்பி பாலா கைது: சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வீரம். இப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பாலா. சிறுத்தை சிவா சகோதரர் தான் இந்த பாலா.  மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிறுத்தை சிவா தம்பி பாலா கைது

மேலும் அவர் அம்ருதா என்ற பிரபல மலையாள பாடகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இப்படி இருக்கையில் கடந்த 2019-ம் ஆண்டு இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகள் அம்மாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று அவருடைய மகள் கெஞ்சி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு அவர் இனிமேல் உங்கள் வழியில் வரமாட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தன்னையும் தனது மகளையும் பற்றி சோசியல் மீடியாவில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து அவமதித்ததாக கூறி அவர் மீது எர்ணாகுளம் கடவந்திரா போலீஸ் நிலையத்தில் அம்ருதா புகார் செய்தார்.

பிக் பாஸ் ஷோவை ஹோஸ்ட் செய்த சமந்தா – இணையத்தை கலக்கும் வீடியோ!

இதன் அடிப்படையில் நடிகர் பாலா மீது வலைதளங்கள் மூலம் அவதூறு செய்தல், பெண்ணை அவமதித்தல், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கொச்சியில் இருக்கும் அவரது வீட்டில் வைத்து போலீசார் இன்று கைது செய்தனர். அதுமட்டுமின்றி, அவருடன் சேர்த்து, மேலாளர் ராஜேசும் கைது செய்யப்பட்டார்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர்

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?  

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல்

GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *