சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் மரணம் தொடர்பான செய்திகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ஒரு பிரபலம் ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் தான் திலீப் சங்கர் (வயது 54). மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரையில் ஒளிபரப்பான பஞ்சாக்னி, சுந்தரி உள்ளிட்ட பிரபலமான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?
அதன்படி, தற்போது அவர் பிஸியாக நடித்து வரும் பஞ்சாக்னி சீரியலின் ஷூட்டிங்கிற்காக நடிகர் திலீப் சங்கர், எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். அங்கு இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் திலீப் சங்கர் அங்கேயே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். மேலும் அந்த இரண்டு நாட்களும் சீரியல் குழுவினர் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வந்தனர். ஆனால் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் தெளிவாக தெரியவில்லை என்ற காரணத்தால், இதனால் படக்குழுவினர் சந்தேகப்பட்டு போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படம் ரீ ரிலீஸ்.., கில்லி வெற்றியை தொடர்ந்து தளபதி எடுத்த அதிரடி முடிவு!
இதனை தொடர்ந்து, ஹோட்டல் ரூமுக்கே சென்ற போலீஸ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், திலீப் சங்கர் சடலமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை பிரதே பரிசோதனையின்படி,மரணத்திற்கான காரணம், உள் இரத்தப்போக்கு, கீழே விழுந்த போது தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரின் இறப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!
எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர்.., கண்கலங்கி எமோஷனல் பதிவு போட்ட நடிகை!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!