
Heart Beat சீரிஸ் நடிகர் மீது பாலியல் புகார்: இப்போது இருக்கும் சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் அதிகமாக இருந்து வருவதாக பல்வேறு நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை சனம் ஷெட்டி கூட மலையாளம் மற்றும் தமிழ் திரைத்துறையிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும், அதை யாராலும் மறுக்க முடியாது என்று கூறியிருந்தார்.
ஏன் என்றால் அந்த அளவுக்கு நடிகைகள் இயக்குனர், பெரிய நடிகர்கள், கேமரா மேன் போன்றவர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரைத்துறையில் ஒரு பிரபல நடிகராக இருந்து வந்த ரியாஸ் கான் மீது கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Heart Beat சீரிஸ் நடிகர் மீது பாலியல் புகார்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய போன் நம்பரை ஒரு புகைப்பட கலைஞரிடம் இருந்து வாங்கிய ரியாஸ் கான், இரவு நேரத்தில் என்னை தொடர்பு கொண்டு என்னை பாலியல் உறவுக்கு அழைத்ததோடு மட்டுமின்றி அருவறுக்கத்தக்க வகையில் ரியாஸ் கான் பேசியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் எனக்கு விருப்பமில்லாத பட்சத்தில், அவருடன் நெருங்கிப் பழக தயாராக இருக்கும் என்னுடைய தோழிகளை அறிமுகப்படுத்த முடியுமா? என்று ரியாஸ் கான் கேட்டதாக அந்த நடிகை தெரிவித்துள்ளார். ரியாஸ் கான் போன்ற நபர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். malayalam actress
Also Read: தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு ஆபரேஷன்? மருத்துவமனையில் அவர் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ?
இந்த செய்தி கோலிவுட் மட்டுமின்றி மலையாள துறையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. actor riyaz khan
அவருடைய மகனுக்கு தற்போது தான் கல்யாண பேச்சு பேசி வந்த நிலையில் தற்போது அவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை கேட்டு ஷாக்காகி உள்ளனர்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள்
இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா?
‘மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’