Breaking News: 25 பைசா தான் வேணும் – வங்கியில் அடம்பிடித்த நபர்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் சம்டர் கவுண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் மைக்கேல் பிளெமிங் (41). இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
இப்படி இருக்கையில் இவர் இன்று வங்கிக்கு சென்ற தனது கணக்கில் இருந்து ஒரு சென்ட், அதாவது இந்திய மதிப்பில் 0.024 பைசா வேண்டும் என்று வங்கி அதிகாரியிடம் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி கொடுத்துள்ளார். இதை பார்த்ததும் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் மிகவும் குறைவான காசை வங்கியில் இருந்து எடுக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
25 பைசா தான் வேணும் – வங்கியில் அடம்பிடித்த நபர்
இதனால் கடுப்பான மைக்கேல் என்னை தவறான வார்த்தைகள் பேசும் அளவுக்கு கொண்டு செல்லாதீர்கள் என்று கோபத்துடன் கத்தியுள்ளார். அவர் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்ட நிலையில், வங்கி ஊழியர்கள் உடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 % கட்டணம் – நாளை முதல் முழு கட்டண விலக்கு கிடையாது!
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மைக்கேல் மீது அதிகாரியை மிரட்டியது மற்றும் அவர் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்தது என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மைக்கேல் பிளெமிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம்
இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு
ஒரு ஒயின் பாட்டில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் foot model
மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல்