தமிழகத்தில் மனிதர்களை வைத்து மனித கழிவுகளை சுத்தம் செய்தால் சிறை தண்டனை: இந்த உலகத்தில் எல்லா வேலைகளும் சுலபமாக செய்ய டெக்னாலஜி டெவலப் ஆகி வருகிறது. ஆனால் மனித கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் சூழ்நிலை மட்டும் இப்பொழுது வரை மாறாமல் இருக்கிறது. சாக்கடையில் இறங்கி கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். விஷவாயு தாக்கி பல உயிர்கள் இறந்த போதிலும் பணியாளர்கள் ஒரு வயிறு சோற்றுக்காக தொடர்ந்து இந்த பணிகளை பின்பற்றி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
மேலும் இதை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக பாதாள சாக்கடையில் பணியாளர்களை இறங்க அனுமதிக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு இதற்கு முன்னரே எச்சரித்து இருந்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது, கழிவு நீரை அகற்ற அல்லது சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் சிறை தண்டனை விதிக்கப்படும் 2 ஆண்டு சிறை,ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். மனிதர்களை வைத்து மனித கழிவுகளை சுத்தம் செய்தால் சிறை தண்டனை – tamilnadu news – jail – namakkal
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு – தேர்வாணையம் அறிவிப்பு!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை
உலக சாதனை படைத்த நியூசிலாந்து பவுலர் பெர்குசன்!
சென்னையில் 15 விமான சேவைகள் பாதிப்பு
ஆன்லைனில் செய்திகளை படிக்க விரும்பும் இந்தியர்கள்