
மணிப்பூரில் ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அதன்படி நடப்பாண்டில் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் மணிப்பூரில் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. அப்போது வன்முறை கும்பல் ஒன்று வாக்குசாவடியை சூறையாடியது. அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு இயந்திரத்தை தீ வைத்து எரித்து பெரிய கலவரத்திற்கு அடித்தளமாக மாறியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இருப்பினும் சூழ்நிலையை தேர்தல் அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டு வந்து மறுவாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்ய இருப்பதாக தெரிவித்தனர். அதன்படி மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்த பகுதிகளான ஷங்ஷாக், சிங்காய், உக்ருள், கரோங்க, ஒயினாம் உள்ளிட்ட ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப். 30ம் தேதி) மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தாக்குதல் நடைபெற்றதால் இன்று வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.