Home » செய்திகள் » மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு – மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !

மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு – மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !

மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !

தற்போது மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் உடனான ஆலோசனைக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ் மற்றும் குகி பழங்குடியின மக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல மாதங்கள் நீடித்த மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த வகையில் மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக அமைதி திரும்பி வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. வன்முறை சம்பவத்தில் ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். வீடுகள், வாகனங்களுக்கு ஒரு வன்முறை கும்பல் தீ வைத்து எரித்தது.

அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !

இதனை தொடர்ந்து மணிப்பூரில் வன்முறை தொடரும் சூழ்நிலையில் 5000 வீரர்களை கொண்ட 50 பட்டாலியன் துணை ராணுவத்தை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் உடனான ஆலோசனைக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top