மஞ்சும்மல் பாய்ஸ் பட குணா குகையின் VFX காட்சிகள் வெளியீடு - அடேங்கப்பா எப்படி எடுத்துருக்காங்க!!மஞ்சும்மல் பாய்ஸ் பட குணா குகையின் VFX காட்சிகள் வெளியீடு - அடேங்கப்பா எப்படி எடுத்துருக்காங்க!!

Kollywood News: மஞ்சும்மல் பாய்ஸ் பட குணா குகையின் VFX காட்சி: குணா குகையில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பற்றி எடுக்கப்பட்டு இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன்’ பாடல் தான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மிகப்பெரிய ரீச்சுக்கு காரணம்.

அதுமட்மின்றி படத்துக்காக அவர்கள் போட்ட குணா குகை செட் தான். அப்படியே தத்துரூபமாக கலை இயக்குனர் வடிவமைத்து இருந்தார். அது போக விஎஃப்எக்ஸ் குழுவினரின் பணிகளும் தத்ரூபமாக இருந்தன. வெறும் 6 கோடியில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 60 கோடி வசூல் செய்திருந்தது. மேலும் இந்த படத்தை தமிழ் பிரபலங்கள் முதல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே புகழ்ந்துள்ளது. தியேட்டரில் மட்டுமின்றி ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. guna cave

Also Read: டிமாண்டி காலனி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு – விக்ரம் பிரசாந்துடன் மோதும் அருள்நிதி!

இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் உருவாக்க விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. manjummal boys

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *