காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த மன்மோகன் சிங்கின் மகள்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மன்மோகன் சிங்:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92) நேற்று இரவு 9:51 மணிக்கு உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அவரின் அரசியல் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதிலும் பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரின் இறுதி சடங்கு நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இவருக்கு திருமணமாகி உபிந்தர் சிங், தமன் சிங் மற்றும் அம்ரித் சிங் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இந்த மூன்று பெரும் ஒவ்வொரு துறைகளிலும் வெற்றி வாகை சூடி வருகின்றனர். அவைகள் பின்வருமாறு,
மறைந்த மன்மோகன் சிங்கின் மகள்கள் யார் தெரியுமா? இப்போ என்ன செய்கிறார்கள்?
உப்பிந்தர் சிங்:
இவர் அசோகா பல்கலைக்கழக கல்வியில் ஆசிரியர்களின் டீனாக பணிபுரிந்து வருகிறார். பண்டைய இந்திய வரலாற்றில் உபிந்தர் முக்கியமான பணிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி, ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் இருந்து மதிப்புமிக்க பெல்லோஷிப்களைப் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமன் சிங்:
தமன் சிங் செப்டம்பர் 4, 1963 இல் பிறந்தார். இவர் ஒரு எழுத்தாளர். அதன்படி, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் அவர் ஐபிஎஸ் அதிகாரி அசோக் பட்நாயக்கை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., இரவு 1 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு?.., அரசு அறிவிப்பு!!
அம்ரித் சிங்:
இவர் தற்போது மனித உரிமை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும் அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியனில் (ACLU) கல்விப் பணியாளர், வழக்கறிஞர் மற்றும் ஸ்டான்போர்ட் சட்டப் பள்ளியில் சட்டப் பேராசிரியரான அவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியான இவர், யேல் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
SUZUKI மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுஸுகி காலமானார்! அவருக்கு வயது 94
மக்களே எச்சரிக்கை.., ஜன.1ம் தேதி வரை கனமழை.., சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!!
மன்மோகன் சிங் மரணம்! டெல்லிக்கு செல்லும் முகஸ்டாலின்!!!!
கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!