Manmohan Singh Death: காங்கிரஸ் மூத்த தலைவரும் எகனாமிக்ஸ் சக்கரவர்த்தியான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மரணம் என்ற செய்தி பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் முக்கிய பிரமுகராக விளங்கியவர் தான் மன்மோகன் சிங். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாக விளங்கிய அவர் அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தார். இரண்டு முறை பிரதமராக இருந்துள்ளார். 2004 ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டு முறை இருந்துள்ளார் .
அதுமட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. கடந்த சில வாரங்களாக வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் நாளை (27.12.2024) முழு நேர மின்தடை பகுதிகள் – TNEB அறிவித்த ஏரியாக்களின் லிஸ்ட் இதோ !
அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் அறிவித்து வருகின்றனர். மேலும் இன்று மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். மன்மோகன் சிங் மரணம் செய்தி கேட்டு நாட்டு மக்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்
மேலும் அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தகவலளித்துள்ளார்.
அதேநேரம், மத்திய அரசு நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, இந்தியாவில் ஒரு வார காலம் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் செய்திகள் தமிழ் மொழியில்
2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!
எம்எஸ் தோனி மீது கொடுக்கப்பட்ட புகார்.., என்ன காரணம் தெரியுமா?
திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?
பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!
கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?
சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!