சென்னையில் கஞ்சா விற்பனையாளர்களோடு தொடர்பில் இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் இன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது – கோலிவுட்டில் பரபரப்பு!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக மன்சூர் அலிகான் விளங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று அவருடைய மகன் சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தா பெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையாளர்களோடு தொடர்பில் இருப்பதாக கூறி காவல்துறை விசாரணை செய்து வந்தது.
அதாவது, நேற்று 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது தான் இதற்கு மன்சூர் அலிகான் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அதன் பின்னர் அவரை காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், கைதானவர்களின் செல்போன்களை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் மற்றும் மூன்று பேர் இவர்களோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதன் அடிப்படையில் அலிகான் துக்ளக்(வயது 26), செயது சாகி, முஹம்மது ரியாஸ் அலி, பைசல் அகமது ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் இன்று புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்