பிரபல நடிகரான மன்சூர் அலிகான் மகனிடம் தற்போது சென்னை திருமங்கலம் காவல்துறை விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்சூர் அலிகான்:
தமிழ் திரையுலகில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலி கான் தனது பன்முகத் திறமைகளை வெளிக்காட்டி பிரபலமானவர். திகிலூட்டும் வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி நகைச்சுவை வேடங்களில் நடிப்பது வரை அனைத்தையும் அனுபவசாலியான விளங்கி வருகிறார்.
மன்சூர் அலிகான் மகனிடம் காவல்துறை விசாரணை – எதற்கு தெரியுமா?
கடந்த 1991 இல் தொடங்கிய சினிமா வாழ்க்கை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அரசியலில் பெரும் பங்கு வகித்து வருகிறார். அதுமட்டுமின்றி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
கன்னியாகுமரியில் மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் லீவு – மதுப்பிரியர்களுக்கு வெளியான ஷாக் தகவல்!
அந்த வகையில் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது நடிகர் மன்சூர் அலிகான் மகனிடம் சென்னை திருமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தெளிவாக சொல்ல போனால், கஞ்சா விற்பனைக்கு அவருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்த நிலையில், அவரிடம் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்