
மன்சூர் அலிகான் குடித்த ஜூஸில் விஷமா? இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் நாளை நடக்க இருக்கும் நிலையில் மக்களவை தேர்தலில் அவர் வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரையை முடிக்க தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், மன்சூர் அலிகான் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று ICU வில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மாலையில் சென்ட்ரல் வார்டுக்கு மாறிவிடுவார் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” கடைசி நாள் பிரச்சாரம் என்பதால் நான் தீவிரமாக மக்களிடம் வாக்குகளை சேகரித்து வந்தேன். அப்போது ஒருவர் எனக்கு ஜூஸ் கொடுத்தார். நான் வேண்டாம் என்று கூறிய போதிலும், கட்டாயப்படுத்தி எனக்கு கொடுத்தார். அதை குடித்த பிறகு தான் எனக்கு மயக்கம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். இதை கேட்ட அவர்களுடைய தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த சம்பவத்திற்கு பின்னர் யார் இருப்பார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.