Home » செய்திகள் » தன்னுடைய வாயால் மொத்தத்தையும் இழந்த மன்சூர் அலிகான்., இப்போ கட்சியும் போச்சா?.., நிர்வாகிகள் அதிரடி முடிவு!!

தன்னுடைய வாயால் மொத்தத்தையும் இழந்த மன்சூர் அலிகான்., இப்போ கட்சியும் போச்சா?.., நிர்வாகிகள் அதிரடி முடிவு!!

தன்னுடைய வாயால் மொத்தத்தையும் இழந்த மன்சூர் அலிகான்., இப்போ கட்சியும் போச்சா?.., நிர்வாகிகள் அதிரடி முடிவு!!

மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் சினிமாவை தாண்டி இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியில் தலைவராக பொறுப்பேற்று வந்தார். விரைவில் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் அவர் ஆரணி தொகுதியில் போட்டியிட போவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் அதிமுக கட்சியில் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் மன்சூர் அலிகானை  ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர். இதற்கான காரணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளார்.

அதில், ” மன்சூர் அலிகான் தேர்தல் வரும் பொழுதெல்லாம் புது புது கட்சிகளை தொடங்குகிறார். மேலும் அவர் தானாக எல்லாம் முடிவுகளை எடுக்கிறார். யாரோ சொல்லும் தகவல்களை எல்லாம் வைத்து முடிவு எடுக்கிறார். நிர்வாகிகளுடன் எந்த ஒரு முடிவு குறித்தும் ஆலோசனை செய்வதில்லை. மேலும் மீடியாவில் வாய்க்கு வந்ததை பேசிவிடுகிறார். இதனால் தான் அவரை பதவியில் இருந்து நீக்க காரணம் என்று பொதுச்செயலாளர் கண்ணதாசன் கூறியுள்ளார். 

மக்களே.., மாரடைப்பு வருவதை  ஒரு மாதத்திற்கு முன்பே கணிக்கலாம்.., எப்படி தெரியுமா?.., இத தெரிஞ்சுக்கோங்க!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top