Home » சினிமா » திரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்.., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.., நடந்தது என்ன?

திரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்.., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.., நடந்தது என்ன?

திரிஷா - மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்.., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.., நடந்தது என்ன?

கோலிவுட்டில் சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட விஷயம் என்றால் அது திரிஷா – மன்சூர் அலிகான் பிரச்சனை தான். மன்சூர் அலிகான் மேடையில் வைத்து த்ரிஷாவை கொச்சை வார்த்தை பயன்படுத்தி பேசியதாக கூறி அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக குஷ்பு, சீரஞ்சீவி உள்ளிட்டோர்  கண்டனம் தெரிவித்த பின்னர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நிலையில், அந்த மன்னிப்பை திரிஷா ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில்  குஷ்பு, சிரஞ்சீவி மற்றும் த்ரிஷா ஆகியோர் மீது மான நஷ்ட ஈடு கோரி  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்ததால் 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மன்சூர் அலிகான் வழங்கறிஞர் பணத்தை கட்டுவதற்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று வாதாடினார். இதை தொடர்ந்து பேசிய நீதிபதி, இனிமேல் ஒருவரை குறித்து கருத்து கூறும் போது அதனால் ஏற்படும் பின் விளைவுகளை புரிந்து செயல்பட வேண்டும் என்றும் இந்த வழக்கை அடுத்த மாதம் 5ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

சிவன் பக்தர்களே.., இந்த 4 நாட்களில் சதுரகிரி சுந்தர – சந்தன மகாலிங்கம் மலைக்கு போகலாம் – வனத்துறையினர் அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top