த்ரிஷா - மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்.., அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!! த்ரிஷா - மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்.., அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!

த்ரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் நடித்த திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது, த்ரிஷாவை குறித்து அவதூறாக மன்சூர் அலிகான் பேசிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்த த்ரிஷாவிடம் மன்சூர் அலிகான் கேட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது  மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

அதில் மூவரும் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கில் மனு அளித்ததால் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தனி நீதிபதி விதித்த ரூ.1 லட்சம் அபராதம் உத்தரவை ரத்து செய்துள்ளது. மேலும் த்ரிஷாவிற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை மட்டும் உறுதி செய்தது. 

கேன்சர் மீண்டும் வந்தால்.., ஒரு 100 ரூபாய் மாத்திரை போதும்.., பிரபல ஆராய்ச்சி நிறுவனம் சாதனை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *