Home » செய்திகள் » 24 வயதில் மரணமடைந்த உலக சாதனை படைத்த முக்கிய வீரர்.., சோகத்தில் தத்தளிக்கும் பொது மக்கள்.., என்ன நடந்தது? 

24 வயதில் மரணமடைந்த உலக சாதனை படைத்த முக்கிய வீரர்.., சோகத்தில் தத்தளிக்கும் பொது மக்கள்.., என்ன நடந்தது? 

இரண்டு நாட்களாக பிணமாக கிடந்த பிரபல இயக்குனர்.., கொலையா? தற்கொலையா?.., போலீஸ் தீவிர விசாரணை!!

மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் கென்யாவை சேர்ந்த கெல்வின் கிப்டம் (24). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சிகாகோ மாரத்தானில் 2:00:35 என்ற உலக சாதனையை படைத்தார். சொல்ல போனால் சக கென்யாவைச் சேர்ந்த வீரரான எலியுட் கிப்சோஜி என்பவரின் சாதனையை முறியடித்தார். இந்நிலையில் கெல்வின் கிப்டம் அவரது பயிற்சியாளரும் காரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த செய்தியை கேட்ட மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இது குறித்து கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் கிடியோன் கிமையோ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்  “உலக சிறந்த மாரத்தான் சாதனையாளரான கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் எல்டோரெட் இருவரும் கார் விபத்தில் காலமானதை சோகத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய இழப்பு மாரத்தான் வீரர்களுக்கு பெரும் கடினமான ஒன்று. அவரின் குடும்பத்தார்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல். இந்த சம்பவத்தால்  கெய்யோ தெற்கு மக்கள் சோகத்தில் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.      

தளபதியின் “கோட்” படத்தில் மறைந்த விஜயகாந்த்., கேப்டன் குடும்பத்தினர் போட்ட முக்கிய கண்டிஷன்.., என்னனு தெரியுமா? 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top