90s கிட்ஸ் மக்களுக்கு திருமணம் தடைபட்டு போகுதா அப்ப கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் 90s கிட்ஸ் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருந்து வருகின்றனர். மேலும் எப்படியாவது ஒரு கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று, கோவில் குலமாக ஏறி வருகின்றனர். இப்படி திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண் பெண் இருவரும் இந்த கோவிலுக்கு சென்றால் கண்டிப்பாக திருமணம் முடியும் என்று நம்பப்படுகிறது. அதாவது, தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டம் புவனகிரி அருகாமையில் அமைந்திருக்கும் பு. உடையூர் என்ற கிராமத்தில் கல்யாண வெங்கடேச பெருமாள் என்ற கோவில் இருக்கிறது.
திருமணம் தடைபட்டு போகுதா? .., அப்ப இந்த கோவிலுக்கு போங்க.., கல்யாணம் கன்ஃபார்ம்!!
மிகவும் பழமை வாய்ந்த வைணவ கோவிலான இது மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் தான் ராமானுஜர் சில தங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த கோவில் மிகவும் சேதமடைந்து இருந்ததால் ராமானுஜர் சொல்லித்தான் அந்த ஊர் மக்கள் கோவிலை புதுப்பித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு உள்ளே சென்றால், மணி மண்டபம், மகா மண்டபம், அர்த்த ஜாம வாசலில் ஜெயன், விஜயன் உள்ளிட்ட இடங்கள் உள்ளது.
மகர சங்கராந்தி 2025 சுப முகூர்த்தம் எப்போது?.., என்ன தானம் செய்தால் பலன் கிடைக்கும்?
இந்த கோவிலில் கல்யாண வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூ தேவியுடன் இருக்கும் கோலத்தை கல்யாணம் ஆகாதவர்கள் தரிசனம் செய்தால், தடைப்பட்டுப் போன கல்யாணம் உடனே நடக்கும் என்று நம்பிக்கை மக்களிடம் நிலவி வருகிறது. மேலும் இந்த பு.உடையூர் கிராமத்திற்கு செல்ல கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி இருக்கிறது. எனவே இந்த கோவிலுக்கு சென்று திருமணம் தடைபட்டு போகும் மக்கள் பயனடைவீர்கள் என்று நம்புகிறோம்.
ஆன்மிக செய்திகள் உடனுக்குடன் இதோ!
தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!
கந்த சஷ்டி விரதம் 2024: முருகனுக்கு வீட்டில் இருந்து விரதம் இருப்பது எப்படி?
பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) – என்ன காரணம் தெரியுமா?