மருதமலை முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு 2024. கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலையில் உள்ள அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
மருதமலை முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு 2024
துறையின் பெயர் :
இந்து சமய அறநிலையத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
டிக்கெட் விற்பனை எழுத்தர் – 01
அலுவலக உதவியாளர் – 02.
காவலர் – 05
திருவலகு – 03
விடுதி காப்பாளர் – 01
பல்நோக்கு பணியாளர் – 01
ஓட்டுநர் – 05
பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர் – 01
மின் உதவியாளர் – 01
மினி பஸ் கிளீனர் – 01
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை : 21
பணியிடம் :
கோயம்புத்தூர்
சம்பளம் :
மேற்கண்ட பணிகளுக்கு RS.10,000 முதல் RS.58,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
8 ஆம் வகுப்பு, 10TH மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
FACT Helper ஆட்சேர்ப்பு 2024 ! 7ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் 22 ஆயிரம் சம்பளம், விண்ணப்பிக்கலாம் வாங்க !
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பபடிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் அல்லது திருக்கோவில் அலுவலகத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
துணை ஆணையர் / செயல் அலுவலர்,
மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில்,
பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 641046.
மேலும் உறையில் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லையை ஒட்டி அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
செய்முறை தேர்வு,
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 05.03.2024.
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 05.04.2024.
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், கடவுள் நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
முறையாக பூர்த்தி செய்யபடாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட தகுதி சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். தகுதி இல்லாத விண்ணப்பங்களுக்கு திருக்கோவில் சார்பாக எந்தவொரு அறிவிப்பும் தெரிவிக்கப்பட மாட்டாது.
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.