
மீண்டும் தியேட்டரில் ரிலீஸாகும் மாஸ்டர் திரைப்படம்: தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வருபவர் தான் இளைய தளபதி விஜய். தற்போது இவர் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் நம்பிக்கை பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் விதமாக தியேட்டரில் வெளியிடப்பட்டது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதிக அளவில் வசூல் செய்து சாதனை படைத்தது. சொல்ல போனால் இப்படம் சில இடங்களில் கொரோனா காலமாக வெளியாகாமல் இருந்தது. அதாவது UK. USA, CANADA, AUSTRALIA ,UK உள்ளிட்ட பகுதிகளில் தான் படம் வெளியாகாமல் இருந்தது. Hamsini Entertainment என்ற நிறுவனம் தான் வெளியீட்டு உரிமையை பெற்றிந்தது. இந்நிலையில் UK-வில் மாஸ்டர் படம் திரையிட போவதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே அப்பகுதியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாட வெகுவாக காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கி தளபதி 69 படத்துடன் சினிமாவை விட்டு விலக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. box office king – best actor of kollywood – next super star vijay – tvk captain vijay – thalapathy vijay – singer vijay
சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
வாட்ஸ்அப்பில் புதிய வசதி – பயனர்கள் மகிழ்ச்சி!!
இந்தியாவுக்கு வந்த வங்காள தேச எம்.பி மாயம்!