மதிகெட்டான் சோலை. தற்போது தியேட்டர் மற்றும் இணையதளங்களில் வசூலை வாரி குவித்து வரும் படம் தான் “மஞ்சும்மல் பாய்ஸ்” இந்த படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்த குணா குகையை போலவே கொடைக்கானலில் பலரும் அறிந்திடாத மற்றும் மர்மங்கள் நிறைந்த ஒரு காடை பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கிறோம்.
மதிகெட்டான் சோலை
கொடைக்கானலில் இருக்கும் குணா குகை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது கமல்ஹாசன் நடித்த “குணா” திரைப்படம் தான். கமல் அவர்கள் சினிமா கேரியரில் இந்த படம் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இந்த படத்தின்பெரும்பாலான காட்சிகள் குணா குகையில் படமாக்கப்பட்டது. இந்த குணா குகைக்கு அருகிலே பலரும் அறிந்திடாத ஒரு மர்ம காடு இருக்கிறது. அது தான் “மதிகெட்டான் சோலை” என்று அழைக்கப்படும் கிறுக்கு காடு. இந்த காட்டினுள் நுழைந்தவர்கள் யாரும் திரும்பி வந்தது இல்லை.
அதனால் இந்த காட்டினுள் நுழைவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.மீறி நுழைந்தவர்கள் யாரும் உயிரோடு வந்ததும் இல்லை. அப்படி என்னதான் இருக்கிறது இந்த காட்டில்? மதிகெட்டான் சோலை என்று பெயர் வர காரணம் என்ன? என்ற பல கேள்விகள் எழுகின்றன. இந்த காட்டை மதிகெட்டான் சோலை அல்லது கிறுக்கு காடு என்று சொல்வதற்கு பல வித காரணங்களை மக்கள் கூறுகின்றனர்.
இந்த காட்டினுள் இருக்கும் ஒரு வித மூலிகை செடியில் இருந்து வரும் நறுமணத்தை மனிதன் சுவாசித்தால் அவனது மூளை கெட்டு போய் திரிவர். அதனால் அவர்கள் வழி தெரியாமல் அந்த காட்டினுள்ளே சிக்கி இறந்து விடுகின்றனர் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அனால் தாவரவியல் வல்லுநர்கள் இதை உறுதியாக மறுக்கிறார்கள்.
Google நிறுவனம் CEO சுந்தர் பிச்சை திடீர் பதவி நீக்கம்? காரணம் என்ன தெரியுமா?.., வெளியான ஷாக் தகவல் !!
மற்றொரு சாரார் இந்த காட்டினுள் பழனி மலையில் உள்ள நவபாஷண சிலை போலவே போகர் இங்கும் ஒரு நவபாஷாண சிலையை செய்து வைத்துள்ளார் என்று கூறுகின்றனர். அந்த சிலையை யாரும் அபகரித்து செல்ல கூடாது என்று இந்த காட்டிற்குள் செல்ல தடை விதித்துள்ளனர் என்று இன்னொரு கதையை கூறுகின்றனர். அப்படியே இது உண்மை என்றாலும் அவ்வளவு பெரிய காட்டில் அந்த சிலையை தேடுவது முடியாத காரியம்.
மதிகெட்டான் சோலையில் சில பழங்குடியின மக்கள் வாழ்வதாகவும், அவர்கள் அந்த காட்டில் வரும் மனிதர்களை கடத்தி சென்று கொன்று விடுவதாகவும் சிலர் கூறுகின்றனர். அப்படி இருந்தால் அவர்கள் கண்டிப்பாக ஆங்கிலேயர்கள் கண்களில் பட்டிருப்பார்கள்.
மேலே கூறிய எந்த காரணமும் இல்லை கொடைக்கானலில் பல இடங்களில் இயற்கையை அழித்து பல யூகலிப்டஸ் மரங்களை நட்டு செயற்கை வனமாக்கி விட்டனர். அதே போல் இந்த மதிகெட்டான் சோலை ஆகிவிடக்கூடாது என்றும், இந்த காட்டினுள் இயற்கை பாதுகாக்க படவேண்டும் என்ற நோக்கத்தில் தான் மேலே கூறியது போல் பல கட்டுக்கதைகளை கூறி வருவதாகவும் சிலர் நம்புகின்றனர்.
எதுவாக இருந்தாலும் இன்று வரை இது தடை செய்யப்பட்ட பகுதியாகவே உள்ளது. கொடைக்கானலில் பல சுற்றுலா தளங்கள் உள்ளது. அதில் இது போன்ற மர்மங்கள் மற்றும் அமானுஸ்யங்கள் நிறைந்த பகுதிகளும் உண்டு. குணா குகை பாதுகாப்பு காரணங்களுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மூட பட்டதும் குறிப்பிடத்தக்கது.