"மதுர" படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகைய நியாபகம் இருக்கா?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?.., நம்பவே மாட்டிங்க!!"மதுர" படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகைய நியாபகம் இருக்கா?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?.., நம்பவே மாட்டிங்க!!

“மதுர” பட நடிகை

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் விஜய் தன்னுடைய கெரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் மதுர திரைப்படம். மதுரை மாவட்ட ஆட்சியராக நடித்து அசத்தி இருப்பார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஸ்வேதா என்கிற ரக்ஷிதா.

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், தமிழில் மதுர படத்திற்கு பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் நடிப்புக்கு பிரேக் போட்டு முழுவதுமாக குடும்பத்துடன் செட்டிலானார். தற்போது அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் மதுர படத்தில் நடிகையா இது நம்பவே முடியல என்று வாயடைத்து போய் உள்ளனர். 

காதலுக்கு அப்புறம் குட் நியூஸ் சொன்ன பிக் பாஸ் அமீர் – பாவனி.., திருமண தேதியை அறிவித்த ஜோடி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *