மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதி: மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ஏழாவது கட்ட தேர்தல் வருகிற ஜூன் 1ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தொடர்ந்து அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் வருகிற ஜூன் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் இருந்த போது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை குடும்பத்தினர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த அறுவை சிகிச்சை இன்று மாலை அல்லது நாளை காலை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அரசியலில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதி – mdmk General Secretary Vaiko – mdmk party – loksabha election 2024 – election 2024 news
புனே கார் விபத்து விவகாரம் – சிறுவனின் ரத்த டெஸ்டை மாற்றிய 2 மருத்துவர்கள் – கைது செய்த போலீஸ்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ்
கொடைக்கானல் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மரணம்