நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் நோய்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் சிறிய காய்ச்சல், தலைவலி என்றால் கூட மருந்தகங்களில் மருந்து வாங்கி உண்ணும் வழக்கம் நம் அனைவரிடத்திலும் இருக்கும் இயல்பான பழக்கமாகும். இதனால் சில நேரங்களில் நமக்கு தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதன் காரணமாக மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு ஏற்பட்ட திடீர் விபத்து?., இத மட்டும் பண்ணிராதீங்க தளபதி.., மருத்துவர் அட்வைஸ்!!
மேலும் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் வழங்கக்கூடிய மருந்து மற்றும் மாத்திரைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதை தடுக்க மற்றும் ஆன்லைன் மருந்து விற்பனைகளை முறை படுத்துவதற்கு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.