நேற்று சனிக்கிழமை கும்பத்திலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் தாவினார். இதனால் மீன ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார். இதனால் நீங்கள் பதற்றம் அடைய தேவையில்லை. கடவுள் துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். மேலும் இந்த சனிப் பெயர்ச்சியால் மீன ராசியினருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மீனம் சனிப்பெயர்ச்சி 2025.., ஆரம்பிக்கும் ஜென்ம சனி.., உஷாரா இருங்கள்.., முழு பலன்கள் இதோ!!
மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள்:
உங்களுக்கு ஜென்ம சனி பிறக்க போவதால் வாழ்வில் சில தடுமாற்றங்கள், சிக்கல்கள் ஏற்படலாம். நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பண செலவுகள் வரும்.
குறிப்பாக மனைவி வழியில் தான் செலவுகள் வரும். அதுபோக, உங்களிடம் உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வைத்திருப்பது நல்லது. குறிப்பாக உங்களுடைய முட்டிக்கு கீழ் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், உங்களுக்கு வீடு, வாகனம், நகைகள் வாங்குவதில் குறைகள் இருக்காது.
அதுமட்டுமின்றி திருமணம் தடைகள் நீங்கும். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட வங்கியில் கடன் கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு சில விஷயங்களில் மன அழுத்தம் உண்டாகும்.
இந்த மன அழுத்தத்தை குறைக்க அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வந்தால் நல்லது. குறிப்பாக, பழனி, திருப்பதி, பத்ரி, கேதார்நாத் போன்ற மலை தலங்களுக்கு செல்வது சிறப்பு.
மாணவ மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் மரியாதை கிடைக்கும். அதுமட்டுமின்றி சிலர் சுயதொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.
மேலும், கடன் வாங்காமல் இருந்தால் நல்லது. பண விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படும். எனவே பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.
மீனம் சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்:
மீன ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சியின் போது, முருகனை வழிபட்டால் , கடன் பிரச்சினைகள் தீரும். அதுமட்டுமின்றி, சஷ்டி தோறும் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் நல்லது நடக்கும். “ஓம் ஷம் ஷண்முகாய நம” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொன்னால் மன நிம்மதி கிடைக்கும்.